Wednesday, October 28, 2026

ஒரே ஒரு போஸ்ட் தான் X தளத்தில் டாப் ட்ரெண்டிங்கில் அஜித்தின் விடாமுயற்சி !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் 62வது படம் “விடாமுயற்சி”. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதாக அஜித்தின் மேனேஜர் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டில், “
அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் புதிய லொகேஷன் தேர்வு செய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் கதை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படும் தகவலின்படி, இந்தப் படத்தில் அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். அவர்கள் ஒரு வேலை விஷயமாக அஜர்பைஜான் செல்லும்போது அங்கு வைத்து திரிஷா கடத்தப்படுகிறார். அவரை அஜித் எப்படி மீட்பார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் என்று கூறப்படுகிறது.

விடாமுயற்சி படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் மகிழ் திருமேனி தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT