உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது. இந்தப் படப்பிடிப்பில் கமல்ஹாசன், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஐந்து நாட்கள் மட்டுமே நடைபெற்ற தக் லைஃப் படப்பிடிப்புக்கு திடீரென பிரேக் விடப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாட்களும் கமலின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரேக் காரணமாக ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர். இருப்பினும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கமல் மீசை, தாடியுடன் ரங்கட் பாய்ஸ் லுக்கில் மாறவிருக்கிறாராம். அதனால் அதுவரை தக் லைஃப் படப்பிடிப்புக்கு பிரேக் விட்டுள்ளாராம் மணிரத்னம்.
அதன்படி இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே KH 237 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் குறித்தும் கமல் அதிகம் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் படம் குறித்த சில முக்கிய தகவல்கள்:
கமல்ஹாசன், ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றன.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வருகிறது.
