Wednesday, October 28, 2026

அனிமல் 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இந்தியில் கடந்த மாதம் 1ம் தேதி வெளியான அனிமல் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆணாதிக்க திமிருடன் உருவாகியுள்ளதாக பலரும் விமர்சித்தனர். ஆனால், படம் வெளியான சில நாட்களில் ரன்பீர் கபூருக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது.

இந்த நிலையில், அனிமல் 2ம் பாகம் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக ரன்பீர் கபூர் அறிவித்துள்ளார். ஃபிலிம்ஃபேர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அனிமல் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதனை கடந்து தற்போது அனிமல் 2ம் பாகம் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. நச்சுத்தன்மை வாய்ந்த ஆணாதிக்கம் பற்றி ஒரு ஆரோக்கியமான உரையாடல் தொடங்கியுள்ளது. எப்போதுமே சமூகத்தில் ஒரு உரையாடல் தொடங்காத வரை நாம் அதனை முழுமையாக உணர மாட்டோம். அந்த தவறை தான் அனிமல் படத்தில் காட்டியுள்ளதாக ரன்பீர் கபூர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

முதல் பாகத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்தனர். இரண்டாம் பாகத்தில், ராஷ்மிகா மந்தனா மீண்டும் நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் வில்லன் பாபி தியோல் உயிரிழந்துவிட்டார். இரண்டாம் பாகத்தில் அவரது தம்பி கேரக்டர் ரன்பீர் கபூரை பழிவாங்க காத்திருக்கிறார்.

முதல் பாகத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க அளவுக்கதிகமான வன்முறை காட்சிகள், பெண்களை அடிமை போல நடத்துவது போன்றவை மீது அதிகம் விமர்சனங்கள் எழுந்தன. இரண்டாம் பாதி மீது எதிர்பார்ப்பு இருந்தாலும் இதுவும் அதிகமான வன்முறை காட்சிகளுடன் இருக்குமோ என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அனிமல் 2ம் பாகம் வரும் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT