Wednesday, October 28, 2026

நேருக்கு நேராக வந்து தைரியமாக பேசக்கூடியவர் அஜித் ! சரத்குமார் பாராட்டு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் சரத்குமார் இருவரும் தனித்துவமான திறமைகளால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள். அஜித் தனது திறமையான நடிப்பால், சரத்குமார் தனது நேர்மையான அரசியல் செயல்பாடுகளால் ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், அஜித்தின் நேர்மையான குணத்தைப் பாராட்டி சரத்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசினார். சரத்குமார் கூறியதாவது:

ADVERTISEMENT

“அஜித் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவருக்கு திடீரென மனதில் நெருடல் ஏற்பட்டால் முதல் ஆளாக என்னை அழைப்பார். என்னிடம் வந்து அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வார். அது மிகவும் பாராட்டத்தக்க குணம்.

ஒரு சமயம், அஜித் படத்திற்கு எதிராக என் கட்சியில் இருந்த ஒருவர் போராட்டம் நடத்தினாராம். இதைப் பற்றி அஜித் எனக்கு போன் செய்து கேட்டார். அந்த நபர் என் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார். அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நான் அஜித்திற்கு தெளிவுபடுத்தினேன்.

அஜித் ஒரு நேர்மையான மனிதர். அவருக்கு எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் அதை நேரடியாகக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வார். அதுதான் அவரது சிறந்த குணம்” என்று சரத்குமார் கூறினார்.

சரத்குமாரின் இந்தப் பேச்சு அஜித்தின் நேர்மையான குணத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT