Wednesday, October 28, 2026

அஜித் விஜய் இருவரில் யாரு நம்பர் ஒன் !கிங் காங் கூறிய பதில் என்ன தெரியுமா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் தற்போது ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையே புதிய போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த இரு நடிகர்களையும் பற்றி காமெடி நடிகர் கிங் காங் அளித்துள்ள பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT

அதிசயப் பிறவி, போக்கிரி, சுறா உள்ளிட்ட பல படங்களில் ரஜினிகாந்துடன் நடித்துள்ள கிங் காங், “ரஜினிகாந்த் 47 வருஷமா சூப்பர் ஸ்டாரா இருக்காரு. இப்போ இருக்குற இளைஞர்களுக்கு விஜய்யை பிடிக்கிறது. தமிழ் சினிமாவுல இரண்டு பெரும் தூண்கள் என்றா கேட்டா, அது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தான். அவர்களுக்கு அடுத்து விஜய், அஜித் அவர்களை தொடர்ந்து தனுஷ், சிம்பு என ஜெனரேசன் மாறுகிறது.

ஆனால், இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு தலைவரு டஃப் கொடுப்பது கடவுள் கொடுத்த வரம் தான். இருவரையும் கம்பேர் செய்வதே சரி இல்லை. ஒரு வீட்டுக்கு அனைத்து தூண்களும் முக்கியமானது. ரஜினிகாந்த் ஒரு தூண் என்றால், விஜய் ஒரு தூண். அவரது 50வது படமான சுறா படத்தில் எனக்கும் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது பெரிய விஷயம். நடிகர்களை வைத்து போட்டி அரசியல் செய்ய வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

காட்டில் சிங்கம் இருக்கும், யானை இருக்கும், சிறுத்தை இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனிச் சிறப்புடன் இருக்கும் என்று கூறிய கிங் காங், “இரண்டு நடிகர்களையும் ஒப்பிடுவது என்பது தவறு. இருவரும் தமிழ் சினிமாவுக்கு பெரிய பங்களிப்பு செய்தவர்கள். அவர்களை எப்போதும் மதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT