Wednesday, October 28, 2026

பாலாவின் ஐந்தாவது இலவச ஆம்புலன்ஸ் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் பாலா, தனது சொந்த செலவில் இலவச ஆம்புலன்ஸ்களை வழங்கி வருகிறார். இந்த நிலையில், வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக ஐந்தாவது ஆம்புலன்ஸை வழங்கியுள்ளார்.

இந்த கிராமத்தில் சுமார் 172 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், கடந்த ஆண்டு ஒரு கர்ப்பிணி பெண்ணை கயிறு கட்டி கீழே இறக்கியதாக ஒரு செய்தி பார்த்ததாக பாலா தெரிவித்தார். இந்த தகவல் அறிந்த அவர், நேரில் சென்று கிராம மக்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்த கிராமத்திற்கு ஏறிவருவதே மிகவும் கஷ்டமாக இருப்பதாக அவர்கள் கூறினர்.

ADVERTISEMENT

இதனால், இந்த கிராம மக்களின் அவதியைப் போக்க தனது சொந்த செலவில் ஐந்தாவது ஆம்புலன்ஸை வழங்கியுள்ளார் பாலா. இந்த ஆம்புலன்ஸை கிராம மக்களிடம் ஒப்படைத்து, அவர்களின் நலன் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாலா, “எனது உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். ஆமாம், இருக்கிறார்கள் தான். அது அவமானம், கஷ்டம் ஆகியவை. இவையெல்லாம் என் பின்னால் இருந்ததால்தான் நான் இந்த உதவிகளை செய்து வருகிறேன். ‘எதிர்காலத்தில் நீ சிக்னல்ல பிச்சை எடுப்பாய். அப்போது கூட நான் உனக்கு பிச்சை போடாமல்தான் போவேன்’ என்று சிலர் கமெண்ட் செய்கிறார்கள். நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ அதே சிக்னலில் நான் கொடுத்த ஆம்புலன்ஸும் வரும். எனவே எனக்கு அது ஒரு பிரச்சினை இல்லை” என்று கூறினார்.

பாலாவின் இந்த உதவி பாராட்டிற்குரியது. அவரது செயல்கள் சமூகத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT