Wednesday, October 28, 2026

2023 ஊழல் புலனாய்வுக் குறியீடு: டென்மார்க் முதலிடம், இந்தியா 93வது இடம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சர்வதேச அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், 2023 ஊழல் புலனாய்வுக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. இதில் ஊழல் இல்லாத நாட்டின் அதிகபட்ச மதிப்பெண் 100 என கணக்கிடப்பட்டுள்ளது. எந்த நாடு அதிக மதிப்பெண் எடுத்துள்ளதோ அது முதலிடம் பிடிக்கும். மொத்தம் 180 நாடுகள் இந்த தரவரிசை பட்டியலில் கணக்கிடப்பட்டுள்ளன.

ஊழல் தரவரிசையில் 100க்கு 90 மதிப்பெண் எடுத்து டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கடுத்து 87 மதிப்பெண்கள் எடுத்து பின்லாந்து இரண்டாம் இடத்திலும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து அணி 3ஆம் இடத்திலும் உள்ளன. 84 மதிப்பெண்களுடன் நார்வே 4ஆம் இடத்திலும், சிங்கப்பூர் 83 மதிப்பெண்களுடன் 5ஆம் இடத்திலும் உள்ளன.

ADVERTISEMENT

6ஆம் இடத்தில ஸ்வீடன் 82 மதிப்பெண்களுடனும், சுவிட்சர்லாந்து 82 மதிப்பெண்களுடனும் 7ஆம் இடத்திலும், நெதர்லாந்து 79 மதிப்பெண்களுடனும், ஜெர்மனி 78 மதிப்பெண்களுடனும், மற்றும் லக்சம்பர்க் 78 மதிப்பெண்களுடன் 10ஆம் இடத்திலும் உள்ளன.

அதே போல கடைசி இடத்தில், சோமாலியா 11 மதிப்பெண்களுடன், வெனிசுலா 13 மதிப்பெண்களுடனும், சிரியா 13 மதிப்பெண்களுடனும், தெற்கு சூடான் 13 மதிப்பெண்களுடனும், ஏமன் 16 மதிப்பெண்களுடனும் கடைசி இடங்களை பிடித்துள்ளன. கடைசி இடங்களை பெற்றுள்ள நாடுகள் போர் தாக்குதல்கள் காரணமாக நீண்டகாலமாக பொருளாதார ரீதியிலும் பின்தங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நமது இந்தியா 39 மதிப்பெண்களுடன், 2023 ஆம் ஆண்டிற்கான ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் 93வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் கூற்றுப்படி 40 மதிப்பெண்களுடன் 85வது இடத்தை இந்தியா பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஊழல் குறியீட்டில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சில:

அரசியல்வாதிகளின் ஊழல்
அதிகாரிகளின் ஊழல்
காவல்துறை ஊழல்
நீதித்துறை ஊழல்
வணிக ஊழல்
இந்தியாவில் ஊழலை ஒழிக்க, அரசு மற்றும் பொதுமக்கள் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அரசு ஊழல் தடுப்பு சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அதிகாரிகளுக்கு ஊழல் செய்தால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பொதுமக்கள் ஊழலை கண்டறிந்தால், அதை வெளிப்படுத்த தயங்கக்கூடாது.

ஊழலை ஒழிக்க, ஒவ்வொருவரும் தங்கள் பங்கை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT