Wednesday, October 28, 2026

ஒட்டுமொத்த இந்தியாவையே அலற வைக்கும் விடாமுயற்சி கதை இதுவா ? வசூல் வேட்டைக்கு தயாரான அஜித் !!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி படம் ஒரு குழும நடிகர்களைக் கொண்ட ஒரு அதிரடி திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்குமாருடன் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளன. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளதன் மூலம் படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பட குழு சென்னைக்கும் அஜர்பைஜானுக்கும் பறந்து பறந்து சூட்டிங் சென்றது மட்டுமே தெரிய வந்ததை தவிர, படத்திற்கான கதை, அஜித்தின் தோற்றம் என எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடப்படாமல் ரகசியமாகவே இருந்தது. லைக்கா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போதைய தகவலின்படி, வேதாளம் படத்தில் வந்த ஆலுமா டோலுமா மாதிரி, பன்னாட்டு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படத்தில் 5 பாடல்கள் போடப்பட்டுள்ளதாம்.

சுப்ரீம் சுந்தரின் ஆக்‌ஷன் காட்சிகள், பிரத்தியேகமாக எடுக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே சேஸிங்குலாம் தல அஜித்துக்கு சொல்லவா வேணும்? விடாமுயற்சியில் வேகமான ஆக்‌ஷன் மற்றும் ஹைடெக் சேஸிங்குடன் படத்தின் சண்டை காட்சிகள் ஹைலைட்டாக வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

கூடுதல் தகவலாக, அஜித் இரு வேறு தோற்றத்தில் தோன்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற தகவல்களால் படத்தின் ஹைப்பை அதிகரிக்கும் வண்ணம் பிப்ரவரி முதல் வாரத்தில் அஜித்தின் விடாமுயற்சி பஸ்ட் லுக் வெளியிடப்பட்டு தல ரசிகர்களை குஷிபடுத்த உள்ளது.

ஏற்கனவே வெளிநாட்டு படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு வந்துள்ளனர் விடாமுயற்சி பட குழுவினர். எஞ்சிய சூட்டிங் ஹைதராபாத்தில் பிப்ரவரி இறுதிக்குள் முடித்துவிட்டு, இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளது லைக்கா நிறுவனம். படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் 150 கோடியென அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது என்பது கூடுதல் தகவல்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT