Wednesday, October 28, 2026

வீட்டு வைத்தியத்தில் சில எளிய குறிப்புகள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

வீட்டு வைத்தியம் என்பது நம் முன்னோர்கள் காலந்தொட்டே பின்பற்றி வரும் பாரம்பரிய மருத்துவ முறையாகும். இதில் நாம் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எளிய முறையில் நோய்களைக் குணப்படுத்தலாம்.

இங்கே சில பொதுவான வீட்டு வைத்திய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:

ADVERTISEMENT

**வயிற்றுப்போக்கு: கறிவேப்பிலை, சீரகம், மிளகு ஆகியவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க வயிற்றுப்போக்கு நிற்கும்.
**வயிற்றுப்புண்: பீட்ரூட் கிழங்கின் சாற்றுடன் தேனைக் கலந்து குடிக்க வயிற்றுப்புண் குணமாகும்.
**அஜீரணம்: கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகியவற்றை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் குணமாகும்.
**வாய்ப்புண்: கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
**கண் எரிச்சல்: வெந்தயத்தை ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க்கால்களில் தடவினால் கண் எரிச்சல் தணியும்.
**இடுப்பு வலி: சாதம் வடித்த கஞ்சியுடன் நெய், சீரகம் சேர்த்து குடிக்க இடுப்பு வலி குணமாகும்.
**புண்கள்: விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்களுக்கு மேல் பூசினால் புண்கள் விரைவில் ஆறும்.
**வாயுத் தொல்லை: தினமும் குடிநீரைக் காய்ச்சும்போது சுக்கை சேர்த்து குடிக்க வாயுத் தொல்லை நீங்கும்.
**நினைவாற்றல்: வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் உண்டு வர நினைவாற்றல் பெருகும்.
**ஏப்பம்: வேப்பம்பூவை தூள் செய்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொள்ள ஏப்பம் குறையும்.
**பூச்சிக்கடி: வெங்காயத்தை நறுக்கி பூச்சிக்கடியில் தேய்க்க வலி, வீக்கம் குறையும்.
**சுளுக்கு: மிளகுத்தூள், கற்பூரம் சேர்த்து கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்து சுளுக்கு உள்ள இடத்தில் போட சுளுக்கு விட்டுவிடும்.
இந்த வீட்டு வைத்திய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் சில பொதுவான நோய்களைக் குணப்படுத்தலாம். இருப்பினும், தீவிரமான நோய்களுக்கு மருத்துவரை அணுகுவது நல்லது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT