தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜித், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு, அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படம் வழக்கமான அஜித் படம் போல் சீரியஸாக இல்லாமல் காமெடி ஜானரில் உருவாகவிருக்கிறதாம். இதில் எஸ்.ஜே.சூர்யா, அரவிந்த் சாமி, தபு உள்ளிட்டோர் நடிக்கலாம் என்று சொல்லப்பட்டது.


இந்தச் சூழலில், அஜித்குமார் ஆதிக்கை அழைத்துள்ளார். அப்போது, “கதாபாத்திரங்களைவிடவும் கதைக்கு வலிமை தேவை. மல்டி ஸ்டாரர் படமாக இது வர வேண்டும் என்றால் நிச்சயம் மற்ற நடிகர்களுக்கும் சரியான ஸ்பேஸ் இருக்க வேண்டும். எனவே எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை கதை, திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்த சொல்லி அட்வைஸ் செய்திருக்கிறாராம்.


ஆதிக் ரவிச்சந்திரன் கடைசியாக இயக்கிய மார்க் ஆண்டனி படம் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாயை வசூலித்தது. அதன் காரணமாக கவனம் பெற்ற இயக்குநராக மாறிவிட்டார். எனவே அஜித்தை வைத்து அவர் இயக்கப்போகும் படமும் 100 கோடி ரூபாய் க்ளப்பில் சேர வேண்டும் என்று ஏகே ரசிகர்கள் விருப்பப்படுகின்றனர்.


இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
