Wednesday, October 28, 2026

லால் சலாம் படத்தை தடை செய்யக் கோரி மனு! ரசிகர்கள் அதிர்ச்சி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விக்ராந்த், விஸ்ணு விஷால், ரஜினிகாந்த், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’ விரைவில் வெளியாகும்.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.

ADVERTISEMENT

அது என்னவென்றால், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்டு இருந்ததாவது, ”தண்ணீர் பிச்சை கேட்டீர்கள் நாங்கள் கொடுத்தோம் அதைப்போல மின்சாரம் கேட்டீர்கள் கொடுக்கிறோம், எங்களுடைய அழகான பெங்களூருவை கொச்சைபடுத்துனீர்கள் அத்தனையும் தாங்கிக்கொண்டோம். இப்படி கெஞ்சிக்கொண்டே இருக்கிறாய் நாங்களும் கொடுக்கிறோம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என கூறியிருந்தார்.

அது மட்டுமின்றி இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் எனவும் கூறியிருந்தார். அந்த சமயம் அப்படி சொல்லிக்கொண்டு தற்போது அவர் லால் சலாம் படத்தில் நடித்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் கடந்த சில நா

ட்களாகவே அவரை தீட்டி தீர்த்து வருகிறார்கள்.

இதனையடுத்து, தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் லால் சலாம் கதாநாயகி தன்யா பாலகிருஷ்ணன் முன்னதாக பேசியது வைத்து சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் தன்யா, ரஜினி மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் லைக்கா மீதும் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் ” லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் நடித்துள்ள இந்த லால் சலாம் படத்தை வெளியிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் . எனவே படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.**

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT