தென்னிந்திய நடிகர்களில் ஒருவரான தமிழ் நடிகர் தளபதி விஜய், பிப்ரவரி 2 ஆம் தேதி தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை அறிவித்தார். அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், அவர் சினிமா உலகில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். தமிழ்நாட்டின் முழு அரசியல்வாதியாக மாற இரண்டு படங்களை (‘GOAT’ மற்றும் பெயரிடப்படாத படம்) முடித்தவுடன் சினிமாவை விட்டு விலகுவதாக விஜய் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.தளபதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை பிப்ரவரி 2 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தார். 2026 தேர்தலில் அவரது கட்சியினர் போட்டியிடுவார்கள்.
தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் அறிமுகத்தை விஜய் வெள்ளிக்கிழமை அறிவித்தார். கடந்த சில மாதங்களாகவே அவரது அரசியல் பிரவேசம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. அவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களைச் சந்தித்து, சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கியதை அடுத்து வதந்திகள் வலுப்பெற்றன.
நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். ‘தமிழக வெற்றி கழகம்’ என அவர் தனது கட்சிக்கு பெயரிட்டுள்ள நிலையில் அவருக்கு தற்போது ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வலைதளங்களில் 2 முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு அவர்கள் நடிகர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை கிளப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசியலுக்கும், திரைப்பட துறைக்கும் இடையேயான பந்தம் என்பது மிகவும் நெருக்கமானதாகும். நடிகர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடிகர், நடிகராக இருந்து அரசியலில் நுழைந்து அதிமுகவில் முதல் அமைச்சர்களாகினர். திமுக தலைவராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்த கருணாநிதி திரைப்பட துறையில் கதை, வசனம் எழுதி தான் அரசியலிலும் ஜொலித்தார் என்பதை மறக்க முடியாது.
இதுதவிர நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கி எதிர்க்கட்சி தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார். நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி எம்எல்ஏவாகி உள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி உள்ளார். நடிகர் நெப்போலியன் எம்பியாகி மத்திய அமைச்சராக இருந்தார். இயக்குனராக இருந்த சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு அரசியலில் செயல்பட்டு வருகிறார்.
இதுதவிர பல நடிகர் நடிகைகள் பல்வேறு கட்சிகளில் செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தான் தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைவார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று அவர் தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். ‘தமிழக வெற்றி கழகம்’ (Tamilaga Vettri Kazhagam) என நடிகர் விஜய் தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார்.
இந்த அறிவிப்பை நடிகர் விஜய் இன்று தனது கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகர் விஜயின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய உடன் அவருக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. அவரை ஒரு தரப்பினர் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு எதிராக அவர்கள் கருத்துகளை பதிவிட தொடங்கி உள்ளனர். நடிகர் விஜயை அவர்கள் விமர்சனம் செய்ய 2 முக்கிய காரணங்கள் உள்ளன.
இதில் முதல் காரணம் என்பது அவரது கட்சியின் பெயரில் உள்ள ‘தமிழக’ என்ற வார்த்தையாகும். அதாவது நம் மாநிலம் தமிழ்நாடு என அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என கூறினார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என ஆளுநர் மாற்ற வேண்டும் எனக்கூறுவதாக அவர்கள் விமர்சனம் செய்தனர். இத்தகைய சூழலில் தான் ஆளுநர் பாணியில் நடிகர் விஜய் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழக வெற்றி கழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளதாக கூறி நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்த வரிசையில் 2வது காரணம் என்பது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற விஜயின் கட்சியின் பெயரில் இலக்கண பிழை உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். உலகில் பழமையான மொழியான தமிழுக்கு இலக்கணம் என்பது உள்ளது. இலக்கணப்படி பார்த்தால் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயர் என்பது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என வந்திருக்க வேண்டும்.
அதாவது வெற்றி என்ற வார்த்தையின் இறுதியில் வல்லின எழுத்தான ‘க’ என்பது ஒற்றுடன் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜயின் அரசியல் கட்சியின் பெயரில் ‘வெற்றிக்’ என்பதற்கு பதில் ‘வெற்றி’ என்றே உள்ளது. இதனால் நெட்டிசன்கள் நடிகர் விஜயை விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படி நடிகர் விஜயை விமர்சிக்கும் நபர்களுக்கு நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் அவரது இயக்கத்தின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
தளபதி விஜய் கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தில் நடித்தார். நடிகர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘Greatest of All Time’ அல்லது ‘GOAT’ படப்பிடிப்பில் இருக்கிறார். பெரிய பட்ஜெட் என்டர்டெயின்னர் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியிடப்படும்.
விஜய்யின் அறிக்கையின்படி, அவர் ‘GOAT’ படத்திற்குப் பிறகு மேலும் ஒரு படத்தை இயக்குவார், இது அவரது 69 வது படமாகும். இதற்கிடையில், அவர் கார்த்திக் சுப்புராஜுடன் ஒரு படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் காத்திருக்கிறது.
