நடிகர் அஜித்குமார் தனது அடுத்த படமான விடா முயர்ச்சி படத்தின் படப்பிடிப்பை அக்டோபர், 2023 முதல் அஜர்பைஜான் குடியரசில் நடத்தி வருகிறார். இந்த படத்தின் சமீபத்திய விஷயம் என்னவென்றால், விடா முயர்ச்சி குழுவினர் இறுதியாக அஜர்பைஜான் அட்டவணையை முடித்துள்ளனர், மேலும் படப்பிடிப்புக்காக அடுத்த இடத்திற்கு நகர்கின்றனர். . விடா முயர்ச்சி ஒரு ஆக்ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது, இது முதல் முறையாக அஜீத் குமாருடன் எழுத்தாளர் இயக்குனர் மகிழ் திருமேனியின் கூட்டணியைக் குறிக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, பிரணவ் மோகன்லால், ஆரவ், அர்ஜுன் சர்ஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது. அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது.


விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை மட்டும் சுமார் 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மிக அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


இந்நிலையில் அஜர்பைஜானில் நடந்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே ஒருமுறை மணற்புயலால் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் பணிப்புயல் காரணமக ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளதாம். இதையடுத்து அடுத்த கட்ட ஷூட்டிங் ஜார்ஜியா நாட்டின் சிலிபஸ் என்ற நாட்டில் நடக்க உள்ளது. அஜர்பைஜான் நாட்டின் லொகேஷன்களுக்கு இணையான லொகேஷன்கள் அந்த நாட்டில் உள்ளதால் அங்கு ஷூட்டிங் நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட அஜித் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு
