Wednesday, October 28, 2026

விடாமுயற்சி படத்தில் போலீஸாக நடிக்கும் அஜித் ! வில்லன் யார் தெரியுமா? வெளிவந்த பரபரப்பு தகவல்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விடாமுயற்சியின் ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் மையப் பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆக்‌ஷன் நடன இயக்குனரான உச்ச சவுந்தர், படத்திற்காக சில உயர்-ஆக்டேன் ஆக்‌ஷன் காட்சிகளை இயற்றியதாகத் தெரிகிறது. மற்ற ஆதாரங்களின்படி, படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரியில் நிறைவடையும், இறுதி தேதி ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சியின் படைப்பாளிகள் ஏப்ரல் இறுதியில் வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது, அதாவது போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு ஒரு மாதம் ஆகும்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படம் பற்றி வெளியாகவில்லை. இந்த சூழலில் லைகா நிறுவனம் சார்பில் விடாமுயற்சி பற்றி சூப்பர் அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் போட்டியாக களமிறங்கிய வாரிசு படத்தைவிடவும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் படத்திலிருந்து வெளியேற மகிழ் திருமேனி தனது கதையுடன் இந்தப் படத்துக்குள் வந்தார்.ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் ஜானரில் மகிழ் திருமேனி கில்லி என்பதால் அஜித்தை வைத்து அவர் எந்த மாதிரியான ஆக்‌ஷன் படத்தை கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.

அதன்படி படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. படத்தின் பெயர் அஜித் ரசிகர்களில் ஒருதரப்பினருக்கு பெரிதாக திருப்தியை கொடுக்கவில்லை என்பதே உண்மை.படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி; அதற்கு பிறகு படத்திலிருந்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் சோர்வடைந்தனர். அதேசமயம் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. அதுகுறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால் படத்தின் ஒளிப்பதிவாளராக முதலில் பணியாற்றிய நீரவ் ஷா ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டார்.படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவந்த சூழலில் மகிழ் திருமேனிக்கும், நீரவ் ஷாவுக்கும் மீட்டர் ஒத்துப்போகாததால் தற்போது அவருக்கு பதில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவருகிறார். இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்களை அஜித் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின.இதுவரை இரண்டு ஷெட்யூல்கள் படத்தின் ஷூட்டிங் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தும் இந்த இரண்டு ஷெட்யூல்களிலுமே நடித்துவிட்டார். தற்போது அவர் குட்டி ரெஸ்ட் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த ரெஸ்ட்டின்போது தனது குடும்பத்தாருடன் முழுக்க முழுக்க நேரத்தை செலவிட்டார் அஜித். அதுதொடர்பான வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகின.இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை லைகா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதன்படி விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் உரிமத்தை அந்நிறுவனம் பெற்றிருப்பதாகவும், திரையரங்கத்தில் படம் வெளியான பிறகு நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது

இந்நிலையில் விடாமுயற்சி படம் மிகப்பெரிய action படமாக உருவாகி உள்ளதாம் படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாம். வில்லனாக நடிக்க அர்ஜுன் மற்றும் ஆரவ் பெயர்கள் அடிப்பட்ட நிலையில் தற்போது பாலிவுட் டாப் ஹீரோ சஞ்சய் டுட் பெயர் இடம் பெறுகிறது.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் முடிவடைந்த நிலையில், வேகம் பெற்றுள்ளது. அஜீத் குமார் முற்றிலும் சாம்பல் நிறத்தில், நரைத்த முடி மற்றும் தாடியுடன் காணப்பட்டார். விடாமுயற்சியில் இருந்து மேலும் கவர்ச்சிகரமான முன்னேற்றங்கள், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதே வெளியீட்டின் படி, பர்ஸ்ட் லுக்கிற்கான போட்டோஷூட் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT