Wednesday, October 28, 2026

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு மொத்தம் எத்தனை சண்டை காட்சிகள் தெரியுமா? தல ஜாக்கிசானை மிஞ்சிருவாறு போல !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

த்ரிஷா கிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத் குமாருடன் மீண்டும் இணைகிறார், விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்திடம் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் படத்தின் பாடல்கள் மற்றும் அசல் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் அர்ஜுன், திரிஷா, பிக்பாஸ் ஆரவ், ரெஜினா காசண்ட்ரா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து கொண்டிருக்கின்றனர்.அஜித் நடிப்பில் தற்போது ‘விடாமுயற்சி’ படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் ஷுட்டிங் கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வருகிறது. ரசிகர்களும் ‘விடாமுயற்சி’ அப்டேட்டிற்காக தவமாய் தவம் கிடந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் குறித்து மிரட்டலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ‘துணிவு’ படம் ரிலீசாகி இருந்தது. அஜித், எச். வினோத், போனி கபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக இப்படத்தில் கூட்டணி அமைத்திருந்தனர். துணிவில் ஸ்டைலிஷான வில்லன் கதாபாத்திரத்தில் ஏகே நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது.

ADVERTISEMENT

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் அஜித். இதில் மங்காத்தா ஹிட் காம்போவான அஜித், திரிஷா உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வருகின்றனர். டைட்டில் அறிவிப்போடு இப்படம் குறித்த எந்த அப்டேட்யும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கடுமையான அப்செட்டில் இருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விடாமுயற்சியை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ‘ஏகே 63’ படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். திரிஷா இல்லன்னா நயன்தாரா மூலமாக இயக்குனராக அறிமுகமான ஆதிக் இயக்கத்தில் கடைசியாக ‘மார்க் ஆண்டனி’ படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தை இயக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த கூட்டணி ரசிகர்கள் இடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி படத்தின் முதல் பாதியில் ஐந்து சண்டைகாட்சிகளும் இரண்டாவது பாதியில் 4 சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் அதிரடிகளுடன் உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் சென்டிமென்ட் காட்சிகளும் பிரதானமாக உள்ளது என படக்குழுவினரை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சில சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். போகிற போக்கை பார்த்தால் வலிமை படம் அடுத்த ஜாக்கிசான் பட ரேஞ்சுக்கு பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் முதல் ஷெட்யூல் சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் முடிவடைந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜீத் குமார் நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் முற்றிலும் நரைத்த தோற்றத்துடன் காணப்பட்டார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT