‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, மேபு ஜார்ஜ் பால் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, முறையே ஓம் பிரகாஷ் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2024 மே மாதம் திரைக்கு வர உள்ளது
நடிகர் அஜித்குமார் வருஷத்துக்கு ஒரு படம் கொடுத்தாலும் சரி, அல்லது மூணு வருஷத்துக்கு ஒரு படம் கொடுத்தாலும் சரி அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. நிறைய நிறுவனங்களால் எடுக்கப்படும் வருட இறுதி கணக்கெடுப்பில் அதிகம் ரசிக்கப்பட்ட ஹீரோ, அதிகம் தேடப்பட்ட ஹீரோ என முதலிடத்தில் இருப்பது இவர்தான்.
எனக்கு ரசிகர் மன்றம் தேவையில்லை, என்னை தல என்று கூப்பிடாதீங்க என்று அஜித் அடுத்தடுத்து அவருடைய ரசிகர்களுக்கு நிறைய உத்தரவுகள் போட்டார். அதையும் தாண்டி இன்று வரை அஜித்தின் ரசிகர்கள் அவர் மீது அளவு கடந்த பாசத்தை கொட்டி வருகிறார்கள். இதனால் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்காக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார்.
அஜித் தற்போது அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி பட படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார். எப்போதுமே அஜித் ஒரு படத்தை முடிக்கும் வரை மற்றொரு படத்தை பற்றி யோசிக்க மாட்டார். அப்படி இருக்கும் பொழுது விடாமுயற்சி முடிவதற்குள்ளேயே அஜித்தின் 63 வது படத்தின் அப்டேட் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கப் போகிறார் .
உண்மையில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய 63 வது படத்தின் வேலைகளை ஆரம்பிக்க சொல்லிவிட்டார். விடாமுயற்சி படம் மே 1 அவருடைய பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகிறது. ஏகே 63 படம் ஏப்ரல் மாதமே ஆரம்பிக்க இருக்கிறது. அஜித்குமார் இனி வருஷத்திற்கு இரண்டு படங்கள் கொடுப்பது என முடிவெடுத்து இருக்கிறார். இதுதான் ஏகே 63 ஏப்ரல் மாதமே ஆரம்பிப்பதற்கு காரணம்.
அஜித் குமாருக்கு படம் நடிப்பதில் ஆர்வம் இல்லை, சினிமாவை விட்டு விலகப் போகிறார், வெளிநாட்டில் செட்டிலாக போகிறார் என நிறைய வதந்திகள் வெளியானது. அது அத்தனைக்கும். வைக்கும் விதமாக அஜீத் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். தன் மீது அதீத நம்பிக்கை மற்றும் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவு.
நடிகர் விஜய் அரசியல் பணிகளுக்காக தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து இரண்டு வருடங்கள் பிரேக் எடுக்க போகிறார் .படப்பிடிப்பை விரைவுப்படுத்தும் பொருட்டு வாரத்தின் ஏழு நாட்களும் இரவு பகலாக சூட்டிங் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் படத்திற்கான வியாபாரம் தொடங்கப்பட்டது. அஜித்தின் விடாமுயற்சியை ஓடிடி யில் வெளியிட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 150 கோடிக்கும், தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை சன் டிவி 100 கோடிக்கும் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனால் படத்தை வெளியிடுவதற்கு முன்பாகவே 250 கோடி வசூல் என்பது மொத்த பட குழுவினரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. இந்த வெற்றி அஜித்தின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியே.
இதனால் அஜித்தின் அனைத்து படைகளையும் சன் நிறுவனம் வாங்க முடிவெடுத்துள்ளதாம் அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் மூலம் மகிழ் திருமேனி இயக்கும் இந்த ப்ராஜெக்ட் ஒரு ரேஸி என்டர்டெய்னர் ஆகும். படத்தின் பெரும்பகுதி அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது மற்றும் படக்குழு சமீபத்தில் படப்பிடிப்பை முடித்தது.
