அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் மூலம் மகிழ் திருமேனி இயக்கும் இந்த ப்ராஜெக்ட் ஒரு ரேஸி என்டர்டெய்னர் ஆகும். படத்தின் பெரும்பகுதி அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது மற்றும் படக்குழு சமீபத்தில் படப்பிடிப்பை முடித்தது.சமீபத்திய அறிக்கைகளின்படி, இன்னும் இரண்டு அட்டவணைகள் மீதமுள்ளன. மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். வட இந்தியா மற்றும் ஜார்ஜியாவில் கிட்டத்தட்ட 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும், புனேவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித். உலகெங்கிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அவர் நடித்த அசல் படத்திற்கு பிறகு ரசிகர்களை சந்திப்பது, அவர்களுடன் உரையாடுவது என எதிலும் நாட்டம் கொள்ளாமல் இருக்கிறார் அஜித்.
இருந்தாலும் அஜித்தை பின் தொடர்ந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் , த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகும் திரைப்படம்தான் விடாமுயற்சி.இந்தப் படத்தில் ஆரவ் மற்றும் அர்ஜூன் போன்ற முக்கிய நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து கொண்டிருக்க தற்போது அங்கு நிலவும் கால நிலை காரணமாக படப்பிடிப்பை வேறொரு இடத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
படத்தின் தலைப்பை தவிற வேறெந்த அப்டேட்டும் வராத நிலையில் ஆங்காங்கே இருக்கும் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி அதாவது காதலர் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகும் என செய்திகளில் கூறப்படுகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே படப்பிடிப்பை பிப்ரவரியில் முடித்து ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் இடையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக ஒருவேளை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.இதையடுத்து ஜார்ஜியாவிலும் அடுத்தக்கட்ட சூட்டிங்கை நடத்த இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து சென்னையில் 5% ஷூட்டிங் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
விடாமுயற்சி பர்ஸ்ட் லுக்: அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி விடாமுயற்சி படம் மே மாதம் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் சூட்டிங் தாமதத்தால் படத்தின் ரிலீசும் ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் முன்னதாகவே விற்பனையாகியுள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் படக்குழுவினர் துவங்கியுள்ளனர். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தில் அஜித் இணையவுள்ளார். இதனிடைய விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 14ஆம் தேதி காதலர் தினம் அல்லது 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, மேபு ஜார்ஜ் பால் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, முறையே ஓம் பிரகாஷ் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2024 மே மாதம் திரைக்கு வர உள்ளது.
