Wednesday, October 28, 2026

அஜித்தின் அடுத்த மதுரை சம்பவம் லோடிங் !! இயக்குனர் சொன்ன சீக்ரெட்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித் குமார் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பெரிய திரைக்கு வரவிருக்கிறார், வரவிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர், விடா முயர்ச்சி. தமிழ்த் திரையுலகில் பிரபலமான நட்சத்திரத்தின் 62வது வெளியரங்கத்தைக் குறிக்கும் இந்தத் திட்டம், திறமையான திரைப்படத் தயாரிப்பாளரான மகிழ் திருமேனியால் இயக்கப்படுகிறது. விடா முயர்ச்சியின் முக்கிய பகுதிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும். சமீபத்தில், தயாரிப்பாளர்கள் இறுதியாக படத்தின் முக்கிய புதுப்பிப்பை கைவிட்டு, முழு அஜர்பைஜான் பகுதிகளும் மூடப்பட்டுவிட்டதை உறுதிப்படுத்தினர்.

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அஜித்தின் ஏகே 64 படத்தில் வெற்றிமாறனுடன் இன்னொரு பிரபலமும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலம்
அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அஜர்பைஜான் நாட்டில் நடைபெறும் இதில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வ்ருகிறது. விடாமுயற்சியை தொடர்ந்து அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகிவிட்டது.

மார்க் ஆண்டனி திரைப்படம் மூலம் மாஸ் காட்டிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கால்ஷீட் கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இதனிடையே அஜித்தின் 64வது படம் குறித்தும் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக அஜித் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், அது உண்மை இல்லை என்றும், வாடிவாசல் படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் வாடிவாசல் முடிந்ததும் அஜித்துடன் இணையவுள்ளாராம் வெற்றிமாறன். அஜித்தும் அதற்குள்ளாக ஏகே 63 படத்தை முடித்துவிடுவார் என சொல்லப்படுகிறது. இதனால் அஜித் – வெற்றிமாறன் கூட்டணி இணைவது உறுதி என்றே தெரிகிறது.

இந்தப் படத்தை எல்ரெட் குமார் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். வெற்றிமாறனின் விடுதலை படத்தை இதே நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில், அஜித் – வெற்றிமாறன் இணையும் ஏகே 64 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார்.

ஆனால், அஜித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி இதுவரை இணைந்தது கிடையாது. அதனை தீர்த்து வைக்கும் விதமாக அஜித்தின் ஏகே 64 படத்தில் சந்தோஷ் நாராயணன் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் – வெற்றிமாறன் காம்போவை ரசிகர்களே இதுவரை நினைத்துப் பார்த்தது கிடையாது. ஆனால், தற்போது இக்கூட்டணி இணைந்தால் அது தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம் கடந்த சில வருடங்களாக ஆக்‌ஷன் ஜானரில் மட்டுமே நடித்து வரும் அஜித், வெற்றிமாறனுடன் இணைந்தால் பழையபடி நடிப்பிலும் அசரடிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அஜித்தை சந்தித்து மதுரையில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து ஒரு கதை இருப்பதாக கூறினாராம்.என்பதும் குறிப்பிடத்தக்கது .பிரபல நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கும் விடா முயற்சி படத்தில் அஜித் குமார் மைய கேரக்டரில் நடிக்கிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் மூத்த நடிகர் அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் படத்தின் பாடல்கள் மற்றும் அசல் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த ஆக்‌ஷன் த்ரில்லர், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பெரிய திரைகளில் வர உள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT