உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் சில காதல் ரொமான்டிக் திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படும் பிரபல காதல் திரைப்படங்கள் பின்வருமாறு:
டைட்டானிக்
சீதா ராமம்
96
வீர்-சாரா
Yeh Jawaani Hai Deewani
ஜப் வீ மெட்
இவை மட்டுமன்றி, ஏற்கனவே ரீரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் பின்வருமாறு:
வாரணம் ஆயிரம்
சிவா மனசுல சக்தி
மின்னலே
விண்ணைத் தாண்டி வருவாயா
பிரேமம்
‘சீதா ராமம்’
துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சீதா ராமம்’ திரைப்படம், காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 14ம் தேதி அன்று ரீ-ரிலீஸ் செய்யப்படும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
’96’
ஒரு சில காதல் திரைப்படங்கள் தான் மக்கள் மனதில் தாக்கத்தை கொடுத்து உருக வைக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு திரைப்படம் தான் 96. விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ’96’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் சி. பிரேம் குமார் எழுதி, இயக்க நந்தகோபாலால் தயாரித்திருந்தார்.
‘பிரேமம்’
மலையாள சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்ற படங்களில் ஒன்று பிரேமம். அல்போன்சு புத்திரன் இயக்கிய இந்த படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 1-ஆம் தேதியை ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்த்க்கது.
காதலர் தினத்தை கொண்டாட திரையரங்குகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா?
