Wednesday, October 28, 2026

தொடர் தோல்வியால் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கினால், தாங்களே நடிக்கும் படங்களை தயாரிக்க துணிந்துவிடுவார்கள். தற்போது நயன்தாராவுக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக சொல்ல முடியாது என்றாலும், சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளன.

ஒரு காலத்தில் நயன்தாரா நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற காலம் மாறி, தற்போது அவரது படங்கள் தோல்வியடைந்து வருவதால், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ மீண்டும் வெற்றியை தேடும் முயற்சியில் சொந்த படம் தயாரிக்க தயாராகி வருகிறார்.

ADVERTISEMENT

சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த ‘இறைவன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தோல்வியை சந்தித்தது.
அதனை தொடர்ந்து வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தற்போது மாதவன், சித்தார்த் ಜೊತியாக ‘டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா அடுத்ததாக வெற்றி பாதைக்கு திரும்ப அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிறுவனம் ஏற்கனவே பல படங்களை தயாரித்து விநியோகம் செய்துள்ளது.
சமீபகாலமாக நயன்தாரா நடித்த படங்கள் தோல்வியடைந்ததால், ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படத்தை தேர்வு செய்து அதை தானே தயாரிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
அந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்படும் வகையில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
நயன்தாராவின் இந்த முடிவு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது அடுத்த படம் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT