Wednesday, October 28, 2026

அஜித் கிட்ட இருக்க மாஸ் யார்கிட்டயும் இல்லை !கூறியது யார் தெரியுமா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித்தின் ஹாட்ரிக் வெற்றி:

நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்ட அந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்கியிருந்தார். இவர்களது கூட்டணி இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருந்தது. முன்னதாக நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களிலும் இவர்கள் இணைந்து வெற்றி பெற்றிருந்தனர்.

ADVERTISEMENT

விடாமுயற்சி படத்தின் சூட்டிங்:

தற்போது அஜித், இயக்குனர் மகிழ் திருமேனியுடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தின் கொள்கை மற்றும் விருப்பம்:

தன்னுடைய படத்தில் வரும் ஒரு வசனத்தை போல ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய வாழ்க்கையை தானே செதுக்கி வரும் அஜித், தனக்கென்று ஒரு கொள்கை, தனக்கென்று ஒரு விருப்பம் இவற்றை விட்டுக் கொடுக்காமல் நடிப்பையும் தொடர்ந்து வருகிறார். ரசிகர்கள் அவரை “தல” என்று கொண்டாடி வந்த நிலையில், அந்தப் பட்டம் தனக்கு வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தம்:

விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடந்து வந்த நிலையில், அங்கு பெய்து வரும் பனிமழை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசோக் செல்வனின் ஆசை:

இந்நிலையில் நடிகர் அசோக்செல்வன் தனது பழைய பேட்டியொன்றில் தான் அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும் என்றும் அதனால் அவருடன் வில்லனாக நடிப்பதே தன்னுடைய ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்தவிதமான பேக்கப்பும் இல்லாமல் தன்னை நிரூபித்த அஜித்தின் வாழ்க்கை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அசோக்செல்வன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். அஜித்தின் இந்தப் பயணம் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அசோக் செல்வனின் திரைப்பட பயணம்:

முன்னதாக அஜித்தின் பில்லா 2 படத்தில் சிறுவயது அஜித்தாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார் அசோக் செல்வன். தற்போது ப்ளூ ஸ்டார் முதல் ஏராளமான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களில் தன்னை இணைத்துக் கொண்டு அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் சரத்குமாருடன் இணைந்து அசோக்செல்வன் நடித்திருந்த போர் தொழில் படம் சிறப்பான வெற்றியை பெற்றது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT