Wednesday, October 28, 2026

பாக்கியலட்சுமி சீரியல் – இன்றைய எபிசோட் (15-02-2024) இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கோபி மற்றும் ராதிகாவின் கருத்து வேறுபாடு:

இன்றைய எபிசோட்டில், செழியனிடம் பாக்கியா செய்தது தவறு என்று கோபி கூறுகிறார். ஆனால், ராதிகா, ஜெனிதான் பிள்ளையை வளர்க்க வேண்டும் என்று வாதிடுகிறார். ராஜி விஷயத்தில் பாக்கியா நடந்து கொண்டது தவறு என்று ராதிகா குற்றம் சாட்டுகிறார்.

ADVERTISEMENT

பாக்கியா வீட்டிற்கு வருகிறார்:

அடுத்த நாள், பாக்கியா மற்றும் எழில் வீட்டிற்கு வருகின்றனர். ஈஸ்வரி எங்கிருந்து வந்தாய் என்று கேட்க, பாக்கியா திருச்செந்தூரில் இருந்து வந்ததாக கூறுகிறார். கோபிக்கு பாக்கியா குன்னக்குடிக்கு சென்றது தெரியும். அவன் வந்து உண்மையை சொல்லியிருப்பான் என்று தெரிந்தும், பாக்கியா பொய் சொல்கிறாள் என்று ஈஸ்வரி குற்றம் சாட்டுகிறார்.

பாக்கியா மன்னிப்பு கேட்கிறார்:

ராமமூர்த்தி, “நமக்கு ஏன் இந்த வேலை?” என்று கேட்கிறார். “நான் ராஜியை ஓடி வர சொல்லவில்லை. புரியாமல் நின்றவர்களுக்கு உதவி செய்தேன்,” என்று பாக்கியா கூறுகிறார். இருந்தும், ஈஸ்வரி மற்றும் கோபி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் “நான் செய்தது தவறுதான். மன்னித்து விடுங்கள்,” என்று பாக்கியா மன்னிப்பு கேட்கிறார்.

எழில் மற்றும் இனியாவின் உரையாடல்:

“நீ ஏன் மாமா சாரி கேட்டாய்?” என்று எழில் கேட்க, “நம்மால் உண்மையை சொல்ல முடியாது. அதற்காக பேசிக்கொண்டே இருக்க முடியாது. அதனால் மன்னிப்பு கேட்டு முடித்துவிட்டேன்,” என்று பாக்கியா கூறுகிறார். அப்போது அங்கு வரும் இனியா, “எப்பம்மா வந்தீங்க?” என்று மகிழ்ச்சியாக பேசுகிறார்.

அமிர்தா மற்றும் இனியாவின் உரையாடல்:

அமிர்தா வீட்டில் கலவரம் நடந்து இருக்கிறது. “நீ என்ன ஹாயா சொல்கிறாய்?” என்று அமிர்தா கேட்கிறார். “திட்டினாங்களா அம்மா?” என்று இனியா கேட்க, “அந்த அக்கா மூஞ்சு டல்லாவே இருந்தது. போனில் இருந்தார்கள். பார்த்தா இப்படி பண்ணிட்டாங்க. ஆனால் நீ சூப்பர் மா. செமையாக வந்து ஹீரோ மாதிரி நின்றாய்,” என்று அமிர்தா கூறுகிறார்.

எழில் மற்றும் இனியாவின் காதல்:

“பாக்கியா ராஜி விஷயம் வேறு. அம்மா எப்போதும் அப்படி பண்ணுவாங்க. நீ எதையும் பண்ணி வைக்காதே,” என்று பாக்கியா கூறுகிறார்.

“நீ லவ் செய்யலாம். ஆனால், அந்த பையனை எங்களுக்கு பிடிக்க வேண்டும். நல்லவனாக இருக்க வேண்டும்,” என்று எழில் கண்டிஷன் போடுகிறார்.

“வேணாம் இதெல்லாம். நான் நீங்கள் பார்க்கும் பையனையே கட்டிக்கிறேன்,” என்று இனியா கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT