Wednesday, October 28, 2026

GOAT படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லியோ படத்தின் தோல்விக்கு பிறகு:

ADVERTISEMENT

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக அடி வாங்கியது.

இதனால், GOAT திரைப்படத்தின் மூலம் விமர்சகர்களின் வாயை அடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டைம் ட்ராவல் கதைக்களம்:

GOAT திரைப்படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறது என்றும், விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் கமாண்டோ உடையில் துப்பாக்கியுடன் வந்ததை பார்த்த ரசிகர்கள், விஜய் கமாண்டோவாக நடிக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பினர்.

அபியுக்தா விஜய்க்கு தங்கையாக நடிக்கிறாரா?

இந்நிலையில், படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, படத்தில் விஜய்க்கு ஒரு தங்கை கதாபாத்திரத்தை வெங்கட் பிரபு உருவாக்கியிருப்பதாகவும், அதற்கு நடிகை அபியுக்தாவை ஃபிக்ஸ் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு நெகட்டிவ் ரோல்?

அதேபோல், இப்படத்தில் விஜய்க்கு நெகட்டிவ் ஷேட் கலந்த கதாபாத்திரம்தான் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படத்தில் அவருக்கு வெங்கட் பிரபு நெகட்டிவ் ரோலைத்தான் கொடுத்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.

அதன் காரணமாக GOAT படமும் மெகா ஹிட்டாகும் என்று தளபதி ரசிகர்கள் நம்புகின்றனர்.

GOAT திரைப்படம் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

GOAT திரைப்படம் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT