Wednesday, October 28, 2026

சஞ்சனா நடராஜன் நடிக்கும் புதிய படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகை சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘போர்’.

இப்படத்தில் ரிஷிகா என்ற மருத்துவ மாணவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஞ்சனா.

ADVERTISEMENT

படம் பற்றியும், தனது கதாபாத்திரம் பற்றியும் அவர் கூறியதாவது:

“போர் படத்தில் ரிஷிகா என்ற மருத்துவ மாணவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் என் நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தைப் போலவே இருக்கும்.

இப்படம் நண்பர்களிடையே நடக்கும் கதையை சொல்கிறது. அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை விளக்குகிறது.

அத்துடன், அரசியல் விஷயங்கள் மற்றும் சில சமூக பிரச்னைகளையும் பற்றி அலசுகிறது.

இயக்குனர் பிஜாய் நம்பியார் தெளிவான பார்வையுடன் இப்படத்தை இயக்கியுள்ளார். ரிஷிகா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருப்பது போலவே ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இப்படத்தின் கதை நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது.”

சஞ்சனா நடராஜனின் ‘போர்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT