ரசிகர்களுக்கு டுபுள் ட்ரீட்:
அஜித் நடித்த வாலி மற்றும் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படங்கள் பிப்ரவரி 23-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
போட்டி நடிகர்கள்:
அஜித் மற்றும் விஜய் நண்பர்களாக இருந்தாலும், திரையில் எப்போதும் போட்டியாளர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.
துணிவு vs வாரிசு:
கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது, அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் மோதி, இரண்டுமே வெற்றி பெற்றன.
அடுத்த படங்கள்:
விஜய் தற்போது ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்.
அரசியல் & நடிப்பு:
விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளதால், தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலக திட்டமிட்டுள்ளார்.
மீண்டும் மோதல்:
அஜித் & விஜய் படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாகாது என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், வாலி vs காதலுக்கு மரியாதை ரீ-ரிலீஸ் மூலம் மீண்டும் மோதவுள்ளன.
ரசிகர்கள் உற்சாகம்:
இந்த ரீ-ரிலீஸ் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரீ-ரிலீஸ் கலாச்சாரம்:
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை திரையரங்குகள்:
வாலி & காதலுக்கு மரியாதை திரைப்படங்கள் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன.அஜித் & விஜய் ரசிகர்களுக்கு பிப்ரவரி 23-ம் தேதி ஒரு ட்ரீட் காத்திருக்கிறது.
