Wednesday, October 28, 2026

ஒரே ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தான் அஜித் ரசிகர்களிடம் சரண்டர் ஆன வலைப்பேச்சு அந்தணன் ! நீங்களே பாருங்க

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித்குமார் தற்போது தமிழ் திரையுலகில் மிகவும் திறமையான மற்றும் பல்துறை நடிகர்களில் ஒருவர் என்பதை மறுக்க முடியாது. சமீபத்தில், மகிழ் திருமேனியின் இயக்கத்தில், நடிகரின் வரவிருக்கும் படமான விடாமுயர்ச்சியின் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் முடிவடைந்தது.

படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் இந்தியா திரும்பியுள்ளனர். அஜித் குமார் ஒரு குடும்ப மனிதராக அறியப்பட்டவர் மற்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார். மங்காத்தா நடிகர் இந்த இடைவெளியை ஷூட்டிங் கால அட்டவணைகளுக்கு இடையில் எப்படிப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பதும் துல்லியமாகத் தெரிகிறது. சமீபத்திய புதுப்பிப்பின்படி, நடிகர் தனது மகன் ஆத்விக்கின் கால்பந்து கிளப்பில் காணப்பட்டார், அங்கு அவர் சில பெனால்டிகளையும் சுடுவதைக் கண்டார், அதே நேரத்தில் அவரது மகன் அவரை உற்சாகப்படுத்தினார். சமூகவலைத்தளங்களில் வெளியான புகைப்படங்கள் வேகமாக வைரலானது என்பதை சொல்லத் தேவையில்லை

ADVERTISEMENT

சமீபகாலமாக அஜித்தை பற்றி பல காரசாரமான விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதை பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறார். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் அஜித் குறித்து அவருடைய ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார்.

அஜித்தின் சமீபகால நடவடிக்கைகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தமிழ் சினிமாவிலேயே இருந்து கொண்டு தமிழ் சினிமாவிலேயே பணம் சம்பாதித்து ஆனால் தமிழ் சினிமாவை துளி கூட மதிக்க மாட்டேன் என இருக்கும் ஒரே நடிகர் அஜித். அதனால் அஜித்தை புறக்கணிப்போல் என அந்தனன் கூறினார். தமிழ் சினிமாவை மதிக்க மாட்டேன், தமிழ் சினிமாவை எட்டி உதைப்பேன். ரசிகர்களை மதிக்க மாட்டேன் என ஒரு நடிகர் இருக்கிறார். அவரை உச்சத்தில் வைத்து கொண்டாடும் ரசிகர்களை திருத்துவதுதான் என் கடமை என அந்தனன் கூறினார்.அஜித்தின் ஒரு பழைய பேட்டியில் ‘ஒருவர் அவரவர் கடமையை சரியாக செய்தால் போதுமானது’ என அஜித் கூறியிருக்கிறாராம். இதை குறிப்பிட்டு பேசிய அந்தனன் ‘ நீங்க முதலில் உங்க கடமையை செய்தீர்களா? எந்தப் படத்திலேயாவது டை அடித்துக் கொண்டு நடிக்கிறீர்களா? இயக்குனர் தான் கதை எழுதும் போது தன் நடிகன் இப்படி இருக்க வேண்டும், இந்த மாதிரியான உடை அணிய வேண்டும் என்றெல்ல்லாம் நினைத்துதான் எழுதுவான். அவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்கிறீர்களா? நீங்க கடமையை பத்தி பேசுறீங்க?’ என கேட்டிருக்கிறார்.

மேலும் நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். அவரின் இறப்பிற்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்துவது கடமை. இந்த கடமையை செய்தாரா? அவருடைய ஒரு பேட்டியிலாவது என்னை வளர்த்துவிட்டவர்கள் இவர்கள்தான் என வாய்தவறியாவது சொல்லியிருப்பாரா? எஸ்.ஜே.சூர்யா இல்லைனா ஒரு வாலி இல்லை. முருகதாஸ் இல்லைனா ஒரு தீனா இல்லை. இதெல்லாம் அஜித்துக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்கள். ஆனால் அதை பற்றி எங்கேயாவது சொல்லியிருப்பாரா?

பெரிய பெரிய நட்சத்திரங்களான ரஜினி, கமலே பாலசந்தரை இன்றளவும் மனம் உருகி பேசி வருகிறார்கள். ஆனால் அஜித்? அதுமட்டுமில்லாமல் அஜித்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக பணியாற்றியவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. அவர் மறைவுக்கு வந்தாரா? எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் ஒரு காலத்தில் நண்பராய் இருந்தார் என்பதற்காகவாவது வந்திருக்கலாமே? இப்படி இருக்கும் நபரை நாம் எப்படி மதிப்பது? என்றும் அந்தனன் கூறியிருக்கிறார்.

கடமையை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத ஆளு அஜித். எந்தப் பட ப்ரோமோஷனுக்கும் வருவது இல்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்துக் கொண்டு சுற்றும் ஒரே நடிகர் அஜித். இப்படிப் பட்டவரை கண்டிப்பாக நாம் புறக்கணிக்க வேண்டும் என அந்தனன் கூறினார்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் வாழு வாழ விடு என்று எங்கள் தலைவர் பாதையில் அமைதியாக காந்தி வழியில் பயணிக்கிறோம் எங்களை சிண்டி பார்க்காதே அடிக்கு அடி-னு நேதாஜி வழியில் திருப்பி அடிக்க ரொம்ப நேரம் ஆகாது…. என கன்னடகளை தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் அவர் தற்போது அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT