விஜய் சேதுபதி, கத்ரி கைஃப் நடிப்பில் கடந்த டிசம்பர் 12 ம் தேதி மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியானது. த்ரில்லர் படங்களில் தனி முத்திரைப் பதித்த ஸ்ரீராம் ராகவன் படத்தை எழுதி, இயக்கியிருந்தார்.
ஒருநாள் இரவில் நடைபெறும் கதையாக இது தயாராகியிருந்தது.
ஸ்ரீராம் ராகவன் அடிப்படையில் தமிழர். தமிழ்ப் படம் இயக்க வேண்டும் என்பது அவரது நீண்டநாள் விருப்பம். அதற்கேற்ற கதையும், கதாநாயகனும் அமைந்ததால் மெரி கிறிஸ்துமஸ் படத்தை இந்தி, தமிழ் இரு மொழிகளில் எடுத்தார். ஒரு மொழியில் எடுத்து, இரு மொழிகளில் டப்பிங் செய்யும் வழக்கமான ஸ்டைலை பின்பற்றாமல், உண்மையாகவே இரு மொழிகளில் எடுத்தார். இந்திப் பதிப்பில் சஞ்சய் கபூர், வினய் பதக், டினு ஆனந்த் போன்றவர்கள் நடிக்க, தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜன் ஆகியோர் நடித்தனர்.
டிசம்பர் 12 தமிழ், இந்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. எனினும், ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்த தவறியது. இந்திப் பதிப்பு இந்தியாவில் 18.30 கோடிகளை மட்டுமே வசூலித்து தோல்வியடைந்தது. தமிழ் பதிப்பும் சரியாகப் போகவில்லை. மெரி கிறிஸ்துமஸ் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த படமானது.
