இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது நடிகராகவும் படு பிசியாக இருக்கிறார். தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து வரும் அவர், மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் இயக்கியுள்ள “ஜோஷ்வா இமை போல் காக்க” திரைப்படம் வரும் மார்ச் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, அவர் மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் “பஸூகா” படத்தில் இணைந்துள்ளார். டீனோ டென்னிஸ் இயக்கும் இந்தப் படத்தில் பெஞ்சமின் ஜோஷுவா என்ற கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார்.
நடிகர் மம்மூட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் கவுதம் வாசுதேவ் மேனனை வரவேற்று பதிவிட்டுள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தில் ஒரு விசாரணை அதிகாரியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“பஸூகா” படத்தில் காயத்ரி ஐயர், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ உட்பட பலர் நடிக்கின்றனர்.
