Wednesday, October 28, 2026

கார்த்தியும் ஜெயம் ரவியும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இதற்கு முன் இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாகவும், அருள்மொழி வர்மனாகவும் முன்னணி நடிகர்களான கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ரசிகர்களை கவர்ந்தனர். தற்போது இருவரும் இயக்குநர் நலன் குமாரசாமியின் ‘கார்த்தி 26’ மற்றும் இயக்குநர் புவனேஷ் அர்ஜுனனின் ‘ஜெனி’ படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளனர்.கார்த்தி மற்றும் ஜெயம் ரவி தற்போது ஒரே ஸ்டுடியோவில் இந்த படங்களின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. ஆம், ‘கார்த்தி 26’ மற்றும் ‘ஜெனி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அவர்கள் ஒன்றாக மிகவும் ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மகிழ்ச்சியுடன் உரையாடும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இரண்டு படங்களிலும் க்ரித்தி ஷெட்டி தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. ‘கார்த்தி 26’ ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ‘வா வாத்தியரே’ என்ற தலைப்பில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரைப் பற்றிய ஒரு விசித்திரமான நகைச்சுவைப் படம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜெயம் ரவி, கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேண்டஸி படம் ‘ஜெனி’.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT