Wednesday, October 28, 2026

தல டக்கர் டோய்…. ஸ்மார்ட் லுக்கில் அஜித் – ரசிகர்களை மெர்சலாக்கிய ஸ்டைலிஷ் போட்டோஸ் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சமீபத்தில் நடிகர் அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பான தகவல்கள் ಹರவியது.

ஆனால், அடுத்த நாளே தனது மகன் ஆத்விக் பள்ளியில் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி, அஜித் நலமாக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, நேற்று (12 மார்ச் 2024) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் அஜித் மற்றும் மகன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தில், அஜித் தனது மகன் ஆத்விக்கிற்கு ஷூ மாட்டி விடுவது போல காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள், நடிகர் அஜித் நலமாக இருக்கிறார் என்றும், விரைவில் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘விடாமுயற்சி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே, எப்போது தொடங்கும் என ஷாலினியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

விடாமுயற்சி படம்:

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன் மற்றும் ஆரவ் நடித்து வருகின்றனர்.

இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி, ‘வேட்டையன்’ படத்துடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் ரசிகர்களின் வேண்டுகோள்:

பல அஜித் ரசிகர்கள், அஜித் தனது உடல்நலத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும், ஷூட்டிங் பற்றி கவலைப்படாமல் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT