Wednesday, October 28, 2026

தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட்பிரபு !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்! அவர்களின் ஃபேவரிட் ஹீரோ நடிப்பில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று அதிரடியாக ‘ஏகே63’ படத்தின் அப்டேட் வெளியானது.

படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என செம டெரரான டைட்டில் வைத்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். கிளின்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் வெளியான ‘குட், பேட் அண்ட் அக்லி’ என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படத்தின் தலைப்பை ஞாபகப்படுத்தும் வகையில் இந்த டைட்டில் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். மேலும், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கமே அதிரடி: இந்த ஆண்டு தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படங்கள் எந்த அளவுக்கு வசூல் சாதனை படைத்தனவோ, அதை விட அதிக எதிர்பார்ப்புடன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் ஆக உள்ளது.

தீபாவளிக்கு ‘விடாமுயற்சி’: பொங்கலுக்கு ‘குட் பேட் அக்லி’ வெளியானால், அதற்கு முன்பாகவே இந்த ஆண்டு தீபாவளிக்குள் ‘விடாமுயற்சி’ படமும் ரிலீஸ் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் மீண்டும் தீவிரமாக நடிக்கத் தொடங்கியுள்ளதால், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டு, ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் இணைய வாய்ப்புள்ளது.

விஜய் படத்திற்கும் ட்விஸ்ட்: அஜித் படத்தின் அப்டேட் வெளியான சிறிது நேரத்திலேயே விஜய் படத்தின் அப்டேட்டும் வெளியானது. உடனடியாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் “கோட் அப்டேட் வெரி சூன்” என்று பதிவிட்டு விஜய் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்.

‘கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்: யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடியுள்ள ‘கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல போஸ்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில், இனிமேல் வெறும் போஸ்டர்களை மட்டும் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த வெங்கட் பிரபு, ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டு யூடியூபில் சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT