## நடிகர் சூர்யா: “பெண்கள் – சக்தி வாய்ந்தவர்கள்! ‘My life in full’ புத்தகத்தை படியுங்கள்!”
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, பெண்களின் சக்தி குறித்து பேசி அனைவரையும் கவர்ந்திள்ளார். இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது:
பெண்களின் சாதனைகள்:
“அகரம் அறக்கட்டளை தொடங்கி 15 ஆண்டுகளில், 15,000 பேர் படித்து முடித்தும், படித்து கொண்டும் உள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.”
“விண்வெளி, டிஜிட்டல் என அனைத்து துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வருகின்றனர். என்னை சுற்றி உள்ள பெண்களை ரொம்ப சக்தி வாய்ந்தவர்களாக தான் பார்த்து உள்ளேன்.”
“பெண்களால் முடியாதது ஒன்றும் இல்லை என்று நான் நம்புகிறேன். நிறைய படிப்பதும், மதிப்பெண் பெறுவதும் பெண்கள் தான். இந்தியாவை எங்கையோ கொண்டு செல்ல போவது பெண்கள் மட்டுமே.”
“உடல் வலிமையை நம்பி வெற்றி பெறும் கிரிக்கெட்டில் கூட பெண்கள் சாதித்து வருகின்றனர்.”
“லாபம் சம்பாதிப்பதை விட மக்களின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்வதில் பெண்கள் முன்னணியில் உள்ளனர்.”
பெண்களுக்கு ஊக்கம்:
“இது வெறும் ஆரம்பம் தான். உங்கள் மனதில் நீங்கள் என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாக மாற முடியும்.”
“ஆண்களை விட பெண்கள் அதிக உழைப்பை செலுத்த வேண்டும்.”
“தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திரா நூயி எழுதிய ‘My life in full’ என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள். அதில் பல தகவல்களை ஆச்சரியமாக பார்த்தேன்.”
பெண்களின் சக்தியை போற்றி, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சூர்யா பேசியது அனைவரையும் கவர்ந்தது. பெண்கள் தங்கள் கனவுகளை நனவாக்க கடின உழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
