Wednesday, October 28, 2026

விஜய் வழியில் செல்லும் நடிகர் அஜித் ? நீங்களே இப்படி தடுமாறினா எப்படி பாஸ்..!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினியுலகம் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளாக , மற்ற நடிகர்கள் காட்டியிலும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் என இரண்டு முக்கிய நட்சத்திரங்களை வைத்து எடுக்கும் படங்களே அதிகளவு சுற்றி சுழன்று வந்தது. சமீபத்தில், நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால், கோலிவுட்டில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை அஜித் நிரப்புவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்து வருகிறது.

பொதுவாக நடிகர் அஜித் நடிப்பது பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டவர் அல்ல. அவர் திறமையுள்ள பலருக்கு வாய்ப்பு கொடுக்கவும் மற்றும் ரசிகர்களின் வேண்டுகோளுக்காகவும் நடித்து வருகிறார். ஆனால், தற்போது அவர் ஒரு முக்கியமான விஷயத்தில் தடுமாறி இருக்கிறார்.

ADVERTISEMENT

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்திற்கு பிறகு, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரீ மூவிஸ்.

ஆரம்பத்தில், இப்படத்தை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க இருந்தார். ஆனால், தற்போது அது தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவிஸ் கைமாறி உள்ளது. இதற்கு முழு காரணமும் நடிகர் அஜித்குமார் தான் என தற்போது கூறப்படுகிறது

ஏனென்றால், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர் அஜித்துக்கு இப்படத்திற்காக 145 கோடி சம்பளம் பேசியிருந்தார். ஆனால், தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவிஸ், அதை விட 20 கோடி அதிகமாக சம்பளம் பேசியது. இதனால், நடிகர் அஜித் அந்த நிறுவனத்திற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என தகவல் வந்துள்ளது

மேலும், இந்த 20 கோடிக்காக தமிழ் தயாரிப்பாளரை கழட்டிவிட்டு, தெலுங்கு தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அஜித். தளபதி விஜய்யும் இதே தவறை திரும்பத் திரும்ப செய்கிறார் என பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.

அதேசமயம், தற்போது நன்றாக வளர்ந்தவந்த நட்சத்திரங்கள், தங்களை வளர்த்த இந்த தமிழ் சினிமாவுக்காக இதுபோன்ற விஷயங்களை சரிசெய்து கொள்வதில் எந்த தவறும் இல்லை எனவும் சினிமா வாட்டரங்கள் கூறுகின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT