லஸ்ட் ஸ்டோரிஸ் 2′ என்ற ஹிந்தி வெப் சீரிஸில் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் தற்போது காதலித்து வருகின்றனர்.
திருமணம் செய்ய திட்டமிட்டுள்ள இவர்கள், தங்கள் முதல் டேட்டிங் அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விஜய் வர்மா கூறியதாவது:
“நாங்கள் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படப்பிடிப்பின் போது டேட்டிங் செல்லவில்லை.
ஒருநாள் பார்ட்டி வைத்தே ஆக வேண்டும் என்று பேசினோம். ஆனால் அது நடக்கவில்லை.
சில நாட்கள் கழித்து, 4 பேர் பங்கேற்கும் வகையில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தோம்.
அந்த பார்ட்டியில் துணிச்சலுடன், ‘நான் உங்களுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன்’ என்று தமன்னாவிடம் சொன்னேன்.
25 நாட்களுக்குப் பிறகு தான் நாங்கள் முதன்முதலில் டேட்டிங் சென்றோம்.”
திருமணம் பற்றிய கேள்விக்கு:
தமன்னாவுடன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு விஜய் வர்மா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.தமன்னா – விஜய் வர்மா ஜோடியின் காதல் கதை ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
