Wednesday, October 28, 2026

டாப்சி ரகசிய திருமணம் செய்து கொண்டாரா? வெளியான அதிர்ச்சி உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

டாப்சி ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்ததாலும், படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது நடிப்பில் கடைசியாக டன்கி திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் ஹிந்திக்கு சென்ற டாப்சி:

ஆடுகளம் படத்துக்கு பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்கள் வெற்றி பெற்றாலும், டாப்சிக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை.
தெலுங்கில் பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.
ஹிந்தியில் டாப்சிக்கு வெற்றி:

பேபி என்ற படத்தின் ஹிந்தியில் அறிமுகமானார்.
பிங்க் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ரன்னிங் ஷாதி, ஜுட்வா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சபாஷ் மிது படத்தில் மிதாலி ராஜாக நடித்து பலரிடமும் அப்ளாஸை அள்ளினார்.
டன்கி படம் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
காதல் மற்றும் ரகசிய திருமணம்:

டாப்சி முன்னால் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போ என்பவரை காதலித்து வருவதாக சொல்லப்பட்டது.
2013ஆம் ஆண்டிலிருந்து இரண்டு பேரும் காதலித்து வருகிறார்கள் என்றும்; விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்றும் பரபர தகவல் ஓடியது.
டாப்சி எல்லோரிடமும் முறைப்படி அறிவித்துவிட்டுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
டாப்சியும், மத்யாஸ் போவும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்றும்; சினிமாவில் பெரிதாக எந்த பிரபலத்துக்கும் டாப்சி அழைப்பு கொடுக்கவில்லை என்றும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது.
டாப்சி ரகசிய திருமணம் செய்து கொண்டாரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT