நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “The G.O.A.T.” திரைப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“லியோ” திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் “The Greatest of All Time” (G.O.A.T.) படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
“The G.O.A.T.” படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும், அதில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்கா, பேங்காக், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் “The G.O.A.T.” படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து வந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது X தள பக்கத்தில், “அநியாயம் பண்ணாதீங்க… அப்டேட் மிக விரைவில் நண்பா நண்பீஸ்… என்ன நம்புங்க, அது சிறப்பான அப்டேட்டா இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்பது இன்னும் தெரியவில்லை. வெங்கட் பிரபு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
