Wednesday, October 28, 2026

பெருத்த தொகை கொடுத்து கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை மிரட்டி வாங்கிய பிரபல நிறுவனம் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் பிசினஸ்: ஓடிடி லாபம், சாட்டிலைட் நஷ்டம்!
சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் பிசினஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கோட்’ படத்தின் ஓடிடி உரிமை, ‘லியோ’ படத்தின் அளவுக்கு வியாபாரம் ஆகவில்லை என்றாலும், ஒரு முன்னணி ஓடிடி நிறுவனத்திற்கு மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதே நேரத்தில், படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்க போட்டி போட்டன. முன்னணி நிறுவனம் ஒன்று 50 கோடி ரூபாய்க்கு உரிமையை வாங்க விரும்பியது. ஆனால், விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருந்ததால், ஏஜிஎஸ் நிறுவனம் அதிக தொகை கேட்டதாக கூறப்படுகிறது.

50 கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க முடியாது என்று தொலைக்காட்சி நிறுவனம் கறாராக இருந்ததால், ஏஜிஎஸ் நிறுவனம் சில கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று சாட்டிலைட் உரிமையை விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓடிடி உரிமையில் லாபம் ஈட்டியிருந்தாலும், சாட்டிலைட் உரிமை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் தயாரிப்பு தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது. தமிழ்நாடு ரிலீஸ் உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை ஆகியவற்றில் லாபம் பார்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT