Wednesday, October 28, 2026

டேனியல் பாலாஜியின் கடைசியாக நடித்த படம் எது தெரியுமா? குருவை மிஞ்சிய சிஷ்யன்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

காக்க காக்க படத்தின் நண்பர் அன்புச் செல்வன்:

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க படத்தில், தனது மனைவியை காப்பாற்ற நண்பன் அன்புச் செல்வனை (சூர்யா) காட்டிக் கொடுக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டேனியல் பாலாஜி.

ADVERTISEMENT

நெருங்கிய நண்பர்கள்:

இயக்குநராக வேண்டும் என்ற ஆசை காரணமாக பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த டேனியல் பாலாஜியும் கௌதம் மேனனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.

வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லன்:

காக்க காக்க படத்தை தொடர்ந்து வேட்டையாடு விளையாடு படத்தில் டேனியல் பாலாஜிக்கு அமுதன் கதாபாத்திரத்தை கொடுத்து மிகப்பெரிய வில்லனாக மாற்றிவிட்டார் கௌதம் மேனன்.

மச்சான் என்றால் ‘நோ’ கிடையாது:

“மச்சான் கௌதம் மேனன் எப்போது எந்த படத்தில் நடிக்க அழைத்தாலும் நோ சொல்ல மாட்டேன்” என த்ரோபேக் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் டேனியல் பாலாஜி.

கடைசி படம்:

டேனியல் பாலாஜியின் கடைசி படமாகவும் கௌதம் மேனன் இயக்கிய படமே மாறிவிட்டது.

உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடும் ரசிகர்கள்:

“வெற்றிமாறனுக்கு கூட ஒருமுறை அவரது படத்தில் நடிக்க மறுத்து இருக்கிறேன். கேஜிஎஃப் ஹீரோ அழைத்தும் செல்லவில்லை. ஆனால், ஒருபோதும் மச்சான் கௌதம் மேனனுக்கு ‘நோ’ சொன்னதே கிடையாது” என டேனியல் பாலாஜி பேசுவதை கேட்கும் போதே ரசிகர்களுக்கு உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடிவிடும்.

நள்ளிரவில் வந்து நண்பனுக்கு அஞ்சலி:

அப்படி நட்புக்கு இலக்கணமாக இருந்த டேனியல் பாலாஜியின் மறைவு கெளதம் மேனனை எந்தளவுக்கு பாதித்து இருக்கும். அதனால், தான் நள்ளிரவே டேனியல் பாலாஜியின் உயிரற்ற உடலை பார்க்க புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கனத்த இதயத்துடன் கெளதம் மேனன் கிளம்பி வந்து நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடைசி படம் ‘துருவ நட்சத்திரம்’:

வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் ஒரு சின்ன சீனுக்கு வந்து நடித்திருப்பார். அதேபோல சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சியான் விக்ரமை வைத்து கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் டேனியல் பாலாஜி நடித்திருந்தார். அந்த படமே டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமாக மாறிவிட்டது. விரைவில் அந்த படம் வெளியானால் டேனியல் பாலாஜிக்கு ஒரு ட்ரிப்யூட்டாக அமையும்.

நட்புக்கு எடுத்துக்காட்டாக டேனியல் பாலாஜி மற்றும் கெளதம் மேனன் நட்பு விளங்குகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT