நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கண் தானம்:
தான் இறந்த பிறகும், தனது கண்கள் மூலம் இந்த உலகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கண் தானம் செய்திருந்தார் டேனியல் பாலாஜி.
மருத்துவர்களின் பணி:
மருத்துவர்கள் வந்து டேனியல் பாலாஜியின் கண்களை எடுத்துச் சென்றனர். கண்கள் இல்லாத நிலையில், அந்த கண் பகுதியை காட்டன் துணியால் கட்டி வைத்துள்ளனர். மேலும், மூக்கு கண்ணாடி ஒன்றையும் அணிவித்திருக்கின்றனர்.
சோகத்தில் குடும்பத்தினர் மற்றும் சினிமா பிரபலங்கள்:
கண்ணாடி பெட்டிக்குள் டேனியல் பாலாஜி உயிரற்ற உடலாக இருப்பதை பார்த்த அவரது குடும்பத்தினரும் சினிமா பிரபலங்களும் சோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.
கண்ணாடி அணிந்து உறங்கும் டேனியல் பாலாஜி:
கண்கள் கட்டப்பட்ட நிலையில், கண்ணாடி ஒன்றை அணிந்துக் கொண்டு கண்ணாடி பெட்டிக்குள் அவரது உடல் உறங்கிக் கொண்டிருக்கிறது.
பவனின் கண்ணீர் அஞ்சலி:
பொல்லாதவன் படத்தில் ‘அவுட்டு’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பவன், டேனியல் பாலாஜியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். டேனியல் பாலாஜியின் உடல் அருகே மெளனமாக இருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய காட்சிகள் ரசிகர்களை கலங்கடித்துள்ளன.
பிரபலங்களின் இரங்கல்:
வெற்றிமாறன், கெளதம் மேனன், அமீர் உள்ளிட்ட இயக்குநர்கள் மற்றும் விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நேரில் வந்து டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகில் பேரிழப்பாக கருதப்படுகிறது.
