இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் ‘அரண்மனை’ திரைப்படம் 2014இல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் நடித்திருந்தனர். இதன் வெற்றியைத் தொடர்ந்து ‘அரண்மனை 2’, ‘அரண்மனை 3’ என தொடர்ந்து படங்கள் வெளியாகின.
அரண்மனை 4:
தற்போது, ‘அரண்மனை 4’ படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். யோகி பாபு, ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது.
டிரைலர்:
இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. டிரைலர் நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே நேரலையாகப் பார்க்க அவ்னி சினிமாஸ் யூடியூப் பக்கத்தில் பார்க்கலாம்.
எதிர்பார்ப்பு:
‘அரண்மனை’ திரைப்படத் தொடரின் முந்தைய படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றதால், ‘அரண்மனை 4’ படத்திற்கும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. டிரைலர் வெளியீட்டை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
Let the celebration begin 🤩💚
Join us at the grand trailer launch of #Aranmanai4 from the comfort of your home✨
Live Streaming now
🔗 https://t.co/UDmWVlQRPt#Aranmanai4TrailerLaunch #Aranmanai4Trailer#SundarC @khushsundar @benzzmedia @tamannaahspeaks #RaashiKhanna pic.twitter.com/MrVgw1Fg4K— Avni Cinemax (@AvniCinemax) March 30, 2024
