நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அதே நேரத்தில், அரசியலுக்கு வருவதையும் அறிவித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நீண்ட காலமாக விஜய்க்கு அரசியல் திட்டம் உள்ளதை அறிந்தவர்கள், அவரது திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
அரசியல் அறிவிப்புடன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை எனவும் விஜய் அறிவித்திருந்தார்.
விஜய் 69 படத்துடன் அவர் சினிமாவிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது.
விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார்?
விஜய்யின் கடைசி படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வினோத் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கியவர்.
கமல்ஹாசன் – வினோத் கூட்டணி கைவிடப்பட்டது
நடிகர் கமல்ஹாசன் – வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.
விஜய் 69: அரசியல் கதை
இந்த நிலையில், விஜய் 69 திரைப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்தே உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
பழைய நேர்காணல் ஒன்றில் வினோத், ‘நடிகர் விஜய்யை அரசியல் கதையில்தான் நடிக்க வைப்பேன்’ எனக் கூறியிருந்தார்.
250 கோடி பட்ஜெட்
தற்போது, விஜய் 69 திரைப்படத்தை தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த டிவிவி நிறுவனம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசி படமென்பதால் நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். இதைக் கருத்தில் கொண்டே, இதுவரை வெளியான விஜய் படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனாராம்!
விஜய் ரசிகர்கள்:
விஜய் ரசிகர்கள், தங்கள் தலைவர் அரசியலில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், விஜய் 69 படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
