பிரபல மலையாள நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் (83) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
ஜோசப் பிலிப்புக்கு மனைவி ஏலியம்மா ஜோசப் மற்றும் மீரா ஜாஸ்மின் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். மீரா ஜாஸ்மின் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை ஆவார். 2002 ஆம் ஆண்டு வெளியான “ரன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் “பாலா”, “புதிய கீதை”, “ஆஞ்சநேயா”, “சண்டக்கோழி”, “நேபாளி”, “இங்க என்ன சொல்லுது” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ADVERTISEMENT
ஜோசப் பிலிப்பின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ADVERTISEMENT
