Wednesday, October 28, 2026

சூர்யாவின் “அயன்” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான “அயன்” திரைப்படம் போதைப் பொருள் கடத்தல் கதையை மையமாக கொண்ட ஒரு அதிரடி திரில்லர் ஆகும். 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல் படமாக அமைந்தது.

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் பிரபு, நடிகை ரேணுகா, லாரன்ஸ், பொன்வண்ணன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ADVERTISEMENT

படத்தில் ஒரு பாடல், சூர்யா தான் நடித்த முந்தைய படங்களின் கதாபாத்திரங்களில் ஒவ்வொன்றாக தோன்றுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தில் வில்லன் கதாபாத்திரம் “கமலேஷ்” மிகவும் வலிமையானதாகவும், ஈர்க்கும் வகையிலும் இருந்தது. சென்னையில் வாழும் ராஜஸ்தான் வில்லனாக பாலிவுட் நடிகர் ஆகாஷ்தீப் சைகல் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பிரபல சின்னத்திரை நடிகர் அஜய் தான். கே.வி. ஆனந்தின் தந்தை முதலில் அஜய்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார்.

அந்த சமயத்தில் அஜய் “கோலங்கள்” மற்றும் பிற சீரியல்களில் பிஸியாக இருந்ததால், “அயன்” படத்தில் நடிக்க முடியாமல் போனார். இருந்தாலும், கே.வி. ஆனந்த், அஜய் டப்பிங் பேசியதைக் கேட்டு மிகவும் ஈர்க்கப்பட்டார். அவரது குரல் கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்ததாக அஜயை பாராட்டினார்.

“அயன்” திரைப்படம் 75 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT