Wednesday, October 28, 2026

டீன்ஸ் வனிதா விஜயகுமார் மகளின் சாதனை!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சென்னை: இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் குழந்தைகளை மையமாகக் கொண்ட “டீன்ஸ்” என்ற சாகச திரில்லர் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், “எவ்வளவோ ஆடியோ ரிலீசுக்கு போய் இருக்கிறேன், இருந்தாலும் இந்த இசைவெளியீட்டு விழா ரொம்ப முக்கியமான ஒன்று. என் மகள் ஜோவிகா இந்த படத்தில் நடித்து இருந்தால் கூட எனக்கு இவ்வளவு சந்தோஷம் இருந்து இருக்காது. நான் முதன் முதலில் பி. வாசு அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தேன். இதைத் தொடர்ந்து, காக்கை சிறகினிலே படத்தில் பார்த்திபன் சாருடன் வேலை செய்தேன். இப்போ என் மகள் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார் என்பது எனக்கு பெருமையாக இருக்கு.”

ADVERTISEMENT

“நடிப்பு என்பதை தாண்டி ஒரு தொழில்நுட்ப கலைஞராவது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதுவும் பார்த்திபன் சாரின் பள்ளியில் என்பதால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். டீன்ஸ் படத்தின் டிரைலர் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. இது கட்டாயமா திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் என்பது புரிகிறது. இதில் நடித்துள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என்னுயடைய வாழ்த்துக்கள்” என்றார்.

இந்த விழாவில் இயக்குநர்கள் பாக்யராஜ், கே.எஸ் ரவிக்குமார், பேரரசு, இசையமைப்பாளர் டி இமான், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டீன்ஸ் திரைப்படம் ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் ‘உலக சாதனைகள் சங்கத்தால்’ வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT