Tuesday, February 24, 2026

விஜய் ஆண்டனி விஜய் அரசியல் வருகை பற்றி பரபரப்பு பேச்சு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி இணைந்து நடித்துள்ள ‘ரோமியோ’ திரைப்படம் வரும் ஏப்ரல் 11-ம் தேதி ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக வெளியாக உள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் விஜய் ஆண்டனிடம், நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி:

விஜய் 17 வயதில் இருந்தே சினிமாவில் உள்ளார். அதில் உச்சம் தொட்டுவிட்டார்.
ஒரே வேலையில் இருக்கிறார் என்பதால் நமக்கு அன்ப கொடுத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவருக்குத் தோன்றி இருக்கும்.
அதனால் அவர் சினிமாவை விட்டு போகிறார்னு நினைக்கிறேன்.
மக்களுக்கு ஏதாவது செய்யணும் என விஜய் நினைக்கிறார். செய்யட்டும் பார்க்கலாம்.
தொடர்ந்து விஜய் ஆண்டனியிடம் ‘நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது:

நீங்களும் வரலாம், யார் வேண்டுமானாலும் வரலாம்.
இப்போதைக்கு நடிப்பில் தான் கவனம்.
வருங்காலத்தில் சினிமாவில் நிறைய செய்துவிட்டோம், மக்களுக்கு ஏதாவது செய்யலாமே என நினைக்கும்போது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், ஒருவேளை வரலாம்.
மேலும் “விஜய்யின் அரசியல் வருகைக்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது:

நான் திருமாளவன் சார், ஸ்டாலின் சார், விஜய் என அனைவருக்கும் ஆதரவு தருகிறேன், நீங்களும் வரலாம்.
ஓட்டுக்கு பணம் தருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது:

அதைத் தவிர்க்கணும் தான்.
ஆனால் ஒருவேளை அடுத்த உணவுக்கு வழி இல்லை, பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை என்றால் பணம் வாங்கிக் கொள்ளுங்கள்.
ஆனால் பணம் கொடுத்தவருக்கு ஓட்டு போட வேண்டும் என நினைக்காதீர்கள்.
நல்லவருக்கு ஓட்டு போடுங்கள். உங்கள் பணத்தை திரும்பிக் கொடுக்கிறார்கள்.
வாங்கிக் கொண்டு சரியான நபருக்கு மனசாட்சிப்படி வாக்களியுங்கள்.
ஆனால் அதற்கு நேர்மையாக இருக்கத் தேவையில்லை.
கஷ்டப்படும் குடும்பங்கள் வாங்கிக்கோங்க. அது உங்கள் பணம் தான்.
ஆனால் வாங்கிவிட்டு சரியான நபருக்கு மனசாட்சிப்படி வாக்களியுங்கள்.
விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT