தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து, புஷ்பா 2 தற்போது தயாராகி வருகிறது.
அல்லு அர்ஜுன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
புஷ்பா 2: தி ரைஸ்
Happy birthday to the Hero of massesssss 🔥🔥🔥 #aa #alluarjun #pushpa2 pic.twitter.com/KaYDNEocew
— Sahithi Dasari (@sahithidasari7) April 7, 2024
புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “புஷ்பா 2: தி ரைஸ்” தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை 11.07 மணிக்கு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
ரசிகர்களின் அன்பை வென்ற அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில், அவரை சந்திக்க ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர்.
ரசிகர்களை சந்திக்க அல்லு அர்ஜுன் வீட்டை விட்டு வெளியே வந்து அவர்களுக்கு நன்றி கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அல்லு அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புஷ்பா 2 டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
