பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் அடுத்ததாக “சபரி” என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் அனில் இப்படத்தை இயக்கியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு சிம்பு நடித்த “போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் வரலட்சுமி. “தாரை தப்பட்டை”, “சண்டகோழி 2”, “சர்கார்”, “மாரி 2”, “வெல்வட் நகரம்”, “இரவின் நிழல்”, “வீரா சிம்ஹா ரெட்டி” போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
“சபரி” படத்தில் வரலட்சுமிக்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ளார். மது நந்தன், ஜெயபிரகாஷ், ஷபீர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
