தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து, 69வது படத்தில் நடித்த பின்னர், முழு அரசியல் வேலைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன.
சங்கீதாவுடன் விவாகரத்து, பெற்றோரை கண்டுக்கொள்ளாதது, நடிகைகளுடன் திருமணம் போன்ற வதந்திகள் அடிக்கடி வைரலாகின்றன.
இந்நிலையில், விஜய் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு விஷயத்தை செய்து முடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், விஜய் சாய்பாபா கோவிலுக்கு சென்று எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருந்த கோவிலை விஜய் தான் கட்டியிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொரட்டூரில் உள்ள விஜய்க்கு சொந்தமான நிலத்தில், தன்னுடைய தாயார் ஷோபாவின் பெயரில் சாய்பாபா கோவிலை கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டியிருக்கிறார்.
கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் சமீபத்தில் வைரலாகி இருக்கிறது.
விஜய் தன்னுடைய தாயார் மீது கொண்டிருக்கும் பக்தியின் வெளிப்பாடாக இந்த கோவிலை கட்டியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
