Tuesday, February 24, 2026

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘குரங்கு பெடல்’: ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குரங்கு பெடல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மதுபானக் கடை மற்றும் வட்டம் படங்களை இயக்கிய கமல்கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் குழந்தைகளை மையப்படுத்திய கதைக்களம் கொண்டது.

இந்த ஆண்டு கோடை விடுமுறை சமயத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டீசரில், குழந்தைகள் சைக்கிள் பயிற்சி செய்யும் போது குரங்கு பெடல் போடுவதை காட்சி அமைப்புகள் காண்பிக்கின்றன.

இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஏற்கனவே ‘கூழாங்கல்’ மற்றும் ‘கொட்டுக்காளி’ படங்கள் உருவாகியுள்ளன.

‘கூழாங்கல்’ படத்தை பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ளார். ‘கொட்டுக்காளி’ படத்தில் சூரி நாயகனாகவும், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT