Tuesday, February 24, 2026

ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’படத்தின் இன்ட்ரோ சாங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

ஜெயிலர் படத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த் தற்போது த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்தது.

ADVERTISEMENT

துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

திருவனந்தபுரம், திருநெல்வேலி மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும்.

இந்நிலையில், ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெறவுள்ள ஒரு அறிமுகப் பாடல் காட்சி விரைவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலுக்காக சென்னையில் மிகப் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாம். பிரபல நடன இயக்குனர் தினேஷ் இந்த பாடலுக்கு நடனம் அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் பிரம்மாண்டமான அறிமுகப் பாடல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT